முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”என் மகனின் மரணம் கொடூரமானது”..!! ”ஆணுறுப்பில் ரத்தம்”..!! ”கொஞ்சம் கொஞ்சமாக எமனிடம் போன உயிர்”..!! ஷரோனின் தந்தை உருக்கம்..!!

His father, Jayaraj, has said with anguish that his son Sharon suffered unspeakable cruelty during the 11 days he was treated in the hospital.
02:39 PM Jan 22, 2025 IST | Chella
Advertisement

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

எனவே, ஷாரோன் ராஜை கொலை செய்தால் தான், கல்யாணம் நடக்கும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022 அக்டோபர் 14ஆம் தேதி ஷாரோன் ராஜை சமாதானம் செய்ய முடிவு செய்வதுபோல அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். தன்னுடைய காதலி அழைத்தவுடன் நம்பி வீட்டிற்கு சென்ற ஷாரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த ஷரோன் ராஜ், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பரிசோதனையில் அவர் விஷயம் அருந்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன், இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் அவருடைய தாய் மாமாவுக்கும் இந்த கொலையில், தொடர்பு இருப்பதாக அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜனவரி 17ஆம் தேதி இந்த வழக்கில் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளி கிரீஷ்மா தான் என தீர்ப்பளித்தது.

அதன்படி, கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் இந்த வழக்கில் குற்றவாளிகள் எனவும், கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், மகன் ஷாரோன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 11 நாட்களும் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைகளை அனுபவித்ததாக அவரது தந்தை ஜெயராஜ் வேதனையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செடிகளுக்கு அடிக்கக் கூடிய கடுமையான பூச்சி மருந்தை என் மகனுக்கு கிரீஷ்மா கொடுத்துள்ளார்.

இதனால், அனைத்து உறுப்புகளுமே செயலிழந்தன. அந்த 11 நாளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட அவனால் குடிக்க முடியவில்லை. ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கண் முன்னே எமனிடம் அவன் சரணடைந்தான். என் மகனை கிரீஷ்மா, ஸ்லோ பாய்சன் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல முடிவு செய்துள்ளார். அதனால் தான், அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது. மலம் கருப்பு நிறத்தில் சென்றது. எச்சில் கூட ரத்தமாக இருந்தது. என் மகனின் இறப்பு மிக கொடூரமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Read More : ”மோதுவது என்று முடிவாகிவிட்டது”..!! ”பார்த்துவிடுவோம் பெரியாரா..? பிரபாகரனா..?” சீமான் பகிரங்க எச்சரிக்கை..!!

Tags :
கிரீஷ்மாகேரள மாநிலம்பூச்சி மருந்துமரணம்ஷரோன்
Advertisement
Next Article