”என் பையன் சாவுக்கு மருமகள் தான் காரணம்”..!! ”அன்னைக்கு நடந்தது இதுதான்”..!! சாலை விபத்தில் உயிரிழந்த ராகுல் டிக்கியின் தாய் பரபரப்பு பேட்டி..!!
இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இரண்டாவது மனைவி தேவிகா செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ராகுலுக்கு அறிமுகமாகி, பின் நெருங்கிய நண்பர்களாக மாறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். ராகுலுக்கு முதலில் ஒரு திருமணமாகியிருந்தது எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன் 6 மாதம் வாழ்ந்திருக்கிறார். ராகுலின் அம்மா அவரை குடிக்க வைத்து மதுவுக்கு பழக்கமாக்கியது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்” என்று மாமியார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கிடையே ராகுல் டிக்கியின் தாய் கூறுகையில், “நான் என் பையன தங்கம் மாதிரி வளத்தேன். அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவன் ஆசபட்டவள தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சு தான் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா. அந்த பெண்ணை என் சொந்த பிள்ளை மாதிரி தான் பாத்துகிட்டேன். ஆனா, மாமியார் டார்ச்சர், மாமனார் எனக்கு சப்போர்ட் பண்ணுவாருன்னு சொல்லிருக்கு.
முதல்ல என் வீட்டுக்காரரே என் கூட இல்ல. இப்போ தான் என் பையன் கல்யாணத்துக்காகவும், அந்த பொன்னுக்காகவும் வீட்டுக்கு வராரு. செத்துப் போன என் பையன் மேல சத்தியமா சொல்றேன்.. என் மகன் சாவுக்கு மருமகள் தான் காரணம். அவங்க 2 பேருக்குள்ள என்ன வேணும்னாலும் பிரச்சனை இருக்கட்டும். பேசி தீத்துக்கலாம்ன்னு தான் சொன்னேன். ஆனா அவ இனிமேல் இவனோட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்லிட்டா.
அவங்கள நான் வீட்ட விட்டு தொறத்தல. அவங்களே தான் வேற வீடு பார்த்துட்டு போனாங்க. என் பையனுக்கு நான் ஆச ஆசயா வாங்குன மோதிரம், போட்டோ, அவன் வாங்குன அவார்ட்டு வரைக்கும் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்க. அதெல்லாம் எனக்கு வேணும். அவங்களுக்கு நான் கடன் வாங்கியும், நகைய வச்சும் காசு வாங்கிக் கொடுத்தேன். அதெல்லாம் எனக்கு திரும்ப வேணும்.
அந்தப் பொன்னு அவங்க அம்மா பேச்ச கேட்டுட்டு தான் என் பையன விட்டு போனா. அவ போட்ட சண்டைய இந்த தெருவே பாத்துச்சு. அந்த பொன்னு எங்க பேச்ச எல்லாம் கேக்காம வீட்ட விட்டு போயிடுச்சு. இதை கேள்விப்பட்டு தான், ராகுல் அவள வீட்டுக்கு கூட்டிட்டு வர போனான். அப்போ தான் அவன் பைக்ல வேகமா போய் அடிபட்டு இறந்துட்டான்” என்று கூறியுள்ளார்.