For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்.! சிறப்பு முகாமில் சுமூகமாக முடிந்த சிறப்பு ஆட்சியர் பேச்சுவார்த்தை.!

03:49 PM Feb 14, 2024 IST | 1newsnationuser4
ராஜீவ் காந்தி கொலை வழக்கு   உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்   சிறப்பு முகாமில் சுமூகமாக முடிந்த சிறப்பு ஆட்சியர் பேச்சுவார்த்தை
Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை கடந்த நவம்பர் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்தக் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதலையான பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர் .

Advertisement

சிறப்பு முகாமில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறி முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 நாட்கள் உணவு சாப்பிடாமல் இருந்ததை தொடர்ந்து மயக்கமடைந்த ராபர்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் முருகனும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் சிறப்பு முகாமில் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கருணை கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறப்பு முகாமில் மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் முருகன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இலங்கை தூதரகம் அழைத்துச் சென்று அவருக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுப்பதற்கு கால தாமதம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தனது கணவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்த நளினி அவரது உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் நசிமுநிஷா, திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர் லண்டன் செல்வதற்காக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று பாஸ்போர்ட் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து, 14 நாட்கள் உண்ணாவிரதத்தை முருகன் கைவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிறப்பு முகாமில் நிலவிவந்த பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

Tags :
Advertisement