மொசாம்பிக் சிறை கலவரம்!. தப்பியோடிய 1,500 கைதிகள்!. 33 பேர் கொல்லப்பட்டனர்!.
Mozambique: மொசாம்பிக் சிறையில் நடந்த கலவரத்தை பயன்படுத்தி தப்பியோடிய 1500க்கும் மேற்பட்ட கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
மொசாம்பிக்கில் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான ஃபிரீலிமோ வெற்றிபெற்றார். இதனை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு முறைகேடு நடைபெற்றதாக கூறி எதிர்கட்சிகள் வன்முறை கலவரங்களில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடனான் மோதலில் 130 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இதன் பிறகு நாட்டில் அமைதியின்மை நிலவியது. இந்த கலவரத்தை பயன்படுத்தி, மொசாம்பிக் தலைநகர் மாபுடோவில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 1,530 பேர் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர், ஆனால் அவர்களில் 150 பேர் இப்போது மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் ஜெனரல் கமாண்டர் பெர்னார்டினோ ரஃபேல் தெரிவித்தார். மேலும் சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர், ஹெலினா சிறைக்குள் நடந்த கலவரத்துக்கும் வெளியில் நடந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தார். இருப்பினும், அமைதியின்மை தொடர்வதால் குற்றச்செயல்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை பாதுகாப்புப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.