விரட்டி விரட்டி கொட்டிய மலை தேனீக்கள்..!! பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி..!! 4 பேர் படுகாயம்..!!
மலை தேனீக்கள் கொட்டியதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூரை அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், வளர்மதிக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை மட்டை உரிப்பதற்காக அதே கிராமத்தை சேர்ந்த கல்யாணி, ஜெயலட்சுமி , சின்னசாமி என 3 பேரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மலை தேனீக்கள் கூட்டம் 3 பேரையும் கடித்துள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத 3 பேரும் அலறியடித்து, அருகே இருந்த பேருந்து நிலையத்தில் மறைவதற்க்காக ஓடியுள்ளனர். ஆனால், மூன்று பேரையும் விடாமல் துரத்திச் சென்ற தேனீக்கள், பேருந்து நிலையத்தில் கூலி வேலைக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெரியசாமி (45), காந்தி (42) ஆகிய இருவரையும் சேர்த்து கொட்டியுள்ளன.
இதில் நிலை குலைந்து போன பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள நான்கு பேரும் வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு ஓடியுள்ளனர். இதனால், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீப்பந்தம் கொண்டு வந்து தேனீக்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து, பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மலை தேனீக்கள் கொட்டியதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கத்தரிக்காய் இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டதா..? இந்த நோய்களுக்கு இதுதான் அருமருந்து..!!