கிரிக்கெட்டில்தான் அதிக தற்கொலைகள் நடக்கின்றன!. யுவராஜ் சிங் ஓய்விற்கு கோலிதான் காரணம்!. பரபரப்பை கிளப்பிய முன்னாள் CSK வீரர்!.
Robin Uthappa: 2007 டி20 உலகக் கோப்பையை வெல்வதில் ராபின் உத்தப்பா பெரும் பங்காற்றினார், பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வேகமான இன்னிங்ஸ் மற்றும் பந்து வீச்சில் வெற்றி பெற்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தநிலையில், உலகில் அதிக தற்கொலைகள் நடக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரின் மன நிலை மோசமடைந்து அவர் மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவுக்கு அழுத்தம் உள்ளது.
ராபின் உத்தப்பா லல்லன்டோப் உடனான உரையாடலில், 'கிரிக்கெட்டில் தான் அதிக தற்கொலைகள் நடப்பது மிகச் சிலருக்குத் தெரியும். இது வீரர்களுக்கு மட்டும் அல்ல, இது வீரர்கள், நடுவர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கும் பொருந்தும். பெரும்பாலான தற்கொலைகள் இந்த விளையாட்டோடு தொடர்புடையவர்களால்தான் நடைபெறுகின்றன என்று கூறியுள்ளார்.
யுவராஜ் சிங் பா-வின் உதாரணத்தை எடுத்து கொள்ளுங்கள் அவர் புற்றுநோயை வென்று மீண்டும் அணிக்கு வர முயற்சிக்கிறார். அவர் இரண்டு உலக் கோப்பைகளை வெல்ல மற்ற வீரர்களுடன் உதவி இருக்கிறார். அப்படிப்பட்ட வீரருக்கு, நீங்கள் அணியின் கேப்டனானதும், அவரது நுரையீரல் திறன் குறைந்துவிட்டது என்று கூறுக்கிறீர்கள். அவர் போராடுவதை பார்க்கிறீர்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நீங்கள் கேப்டனாக இருக்கையில் அதன் தரத்தைப் பராமரிக்க வேண்டும். ஆனால் எப்போது விதிக்கு விதிவிலக்குகள் உண்டு. இங்கே ஒருவர் விதிவிலக்காக இருக்க தகுதியானவர். ஏனென்றால், அவர் உலக கோப்பையை மட்டும் வெல்லவில்லை. புற்றுநோயையும் வென்றுள்ளார். வாழ்க்கையின் கடினமான சவால்களை வென்றுள்ளார். சில கேள்விகளை இங்கு முன்வைக்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், யுவராஜ் சிங் உடற்தகுதி புள்ளிகளில் சில சலுகைகளை கோரினார். ஆனால் அது அணி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும் யுவராஜ் தகுதி பெற்று மீண்டும் அணிக்குள் திரும்பினார். இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு அவரை மதிக்கவில்லை. அந்நேரத்தில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். அவரது வலுவான ஆளுமையால் அது அவருக்கு ஏற்ப நடந்தது. கோலியின் கேப்டன்ஷிப் குறித்துப் பேசுகையில் உத்தப்பா கூறியது, 'My way or the highway' என்ற அணுகுமுறையைக் கொண்ட கேப்டன் எனக் கூறினார். விராட் கோலியின் கேப்டன்சியில் நான் அதிகம் விளையாடவில்லை. ஆனால் அவர் 'My way or the highway' போன்ற கேப்டனாக இருந்தார். முடிவுகளை மட்டும் சார்ந்தது அல்ல கேப்டன்ஸி. அது உங்கள் அணியினரை எப்படி நடத்துவது போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது எனத் தெரிவித்தார்.
Readmore: சர்க்கரை நோயாளிகள் இந்த பருப்பு வகைகளை உட்கொள்ளக்கூடாது!. ஆபத்தை அதிகரிக்கும்!. காரணம் இதோ!