ரயில்களில் 'சைட்-லோயர்' இருக்கைகளில் இப்படி ஒரு வசதியா? பலருக்கும் தெரியாத அந்த விஷயம்!
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்தியாவில் விதவிதமான பயணங்கள் இருந்தாலும், பயணங்களைப் பொறுத்தவரை, ரயில் பயணங்களே முதலிடத்தைப் பெறுகின்றன. இதற்கு காரணம் மலிவு விலையில், பாதுகாப்பான உற்சாகமான பயணத்தை ரயில்கள் தருகின்றன.
ரயில் பயணம் மக்கள் அதிகம் விரும்பி சென்றாலும் சிலர் அவ்வபோது சில சிரமங்களை மேற்கொள்கிறார்கள். உறுதி செய்யப்படாத இருக்கைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு RAC இடங்கள் கிடைக்கும். அவை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 2 பயணிகள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால் சில சமயங்களில் இந்த சைட் லோயர் இருக்கைகள் RAC இல்லாவிட்டாலும் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் பயணம் செய்வது சிலருக்கு சற்று கடினமாக இருக்கும். ஏனென்றால் இரு இருக்கைகளை ஒன்றாக இணைப்பதால் சில சிரமங்கள் ஏற்படும். நடுவில் உள்ள கேப் நமக்கு அசௌகரியமாக தான் இருக்கும்.
இருப்பினும் பெரும்பாலான ரயில்களில் இந்த சிரமங்களை போக்க சீட் அருகிலேயே ஒரு நீளமான பெட் வைக்கப்பட்டுள்ளது அதை விரித்து அதன் மேல் படுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பலருக்கு தெரியாது. இந்த மெத்தை இருக்கும் இடத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பயணிகள் பலரும் இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பதே தெரியாது என்றும், சில ரயில்களில் இப்படி இல்லை அதற்கு என்ன செய்யவேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/C155sFEJwzy/?utm_source=ig_web_button_share_sheet
Read more ; “ஜூன் 29 ஆம் தேதி 3 ஆம் உலகப்போர் தொடங்கும்..!!” இந்தியாவின் புதிய நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு!!