For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Alert...! தமிழகத்தில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பா...? அமைச்சர் மா.சு தகவல்..!

Monkey measles virus in tamilnadu..
06:51 AM Aug 19, 2024 IST | Vignesh
alert     தமிழகத்தில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பா     அமைச்சர் மா சு தகவல்
Advertisement

குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து விமான நிலையங்களிலும் வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Advertisement

குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல அண்டைய நாடான பாகிஸ்தானிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு மத்திய சுகாதார துறை ‌அமைச்சர் ஜே.பி. நட்டா இது தொடர்பான கூட்டத்தை கூட்டி இந்தியாவில் யாரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். எச்சரிக்கையுடன் மாநில அரசாங்கங்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார். குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து விமான நிலையங்களிலும் வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். தமிழகத்தில் குரங்கம்மை நோய்த் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. குரங்கம்மை பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து விமான நிலையங்களிலும் வைக்க இருக்கிறோம். நானும் அதை ஓரிரு நாட்களில் ஆய்வு செய்ய இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும்

Tags :
Advertisement