முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்த கண்காணிப்பு அலுவலர்கள்...!

Monitoring officers rushed to districts where heavy rain warnings were issued
07:29 AM Nov 26, 2024 IST | Vignesh
Advertisement

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப் பொழிவு ஏற்படக் கூடும். மேலும், கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும். கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு 23.112024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன. மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட ஒருங்கிணைந்து கண்காணித்திட நிர்வாகத்துடன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ் (94999 56205, 88006 56753) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவிதா ராமு (90032 97303) திருவாரூர் மாவட்டத்திற்கு காயத்ரி கிருஷ்ணன், (73388 50002) கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ.ராமன், (9445883226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர. தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags :
rainTamilnadutn governmentதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article