For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் கொட்டப்போகுது..!! ஏப்ரல் மாத சம்பளத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

08:56 AM Apr 05, 2024 IST | Chella
அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் கொட்டப்போகுது     ஏப்ரல் மாத சம்பளத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
Advertisement

18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்றும் இதனால், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவுக்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது.

இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்நிலையில் தான், புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர். இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்நிலையில்தான், இதில் எல்லா பிரிவுக்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். ஆனால், இம்முறை தேர்தலை மனதில் வைத்து அகவிலைப்படி 50 சதவிகிதமாக் உயர்த்தப்படும் என்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.

மார்ச் முதல் வாரம் டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாத தொடக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஏப்ரல் மாத வருமானத்தில் அந்த பணம் கொடுக்கப்படும். அதேபோல், 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : மாஸ் உத்தரவு..!! உங்கள் பத்திரங்கள் நிலுவையில் உள்ளதா..? சார் பதிவாளர்கள் மீது பாயும் நடவடிக்கை..!!

Advertisement