For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’விஜய்க்கு அரசியல் தெரியாது’..!! ’த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் மட்டும் தான் தெரியும்’..!! காட்டமாக விமர்சித்த பத்திரிகையாளர்..!!

04:32 PM May 17, 2024 IST | Chella
’விஜய்க்கு அரசியல் தெரியாது’     ’த்ரிஷா  கீர்த்தி சுரேஷ் மட்டும் தான் தெரியும்’     காட்டமாக விமர்சித்த பத்திரிகையாளர்
Advertisement

பொது வாழ்க்கையில் இறங்கிவிட்டால், அனைத்தையும் சந்தித்து தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப விஜய் அரசியலில் இறங்கியதும் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். அந்த வகையில், பத்திரிகையாளர் பாண்டியன் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றி அசிங்கமாக பேசியிருக்கிறார். அதாவது, விஜய்க்கு முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது. தகுதியும் இல்லை, அறிவும் இல்லை வெறும் புஸ்ஸி ஆனந்தை வைத்து அரசியலில் ஜெயித்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார்.

Advertisement

ஆனால், அவருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்? தேசத்தை பற்றி என்ன தெரியும்? அவருக்கு தெரிந்ததெல்லாம் த்ரிஷா இல்லனா கீர்த்தி சுரேஷ் தான். அரசியலைப் பற்றி நல்ல தெரிந்தவர்களே இங்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர். விஜய்க்கோ அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவரிடம் இரண்டு மூன்று கேள்விகள் கேட்டால், அதற்கு சரியான பதிலும் சொல்லத் தெரியாது. இது ஒன்னும் சினிமா கிடையாது. ஹீரோவாக நடித்தால் பணத்தை பார்க்கலாம் வெற்றி கிடைத்துவிடும் என்று நினைக்கிறாரோ என்னமோ.

ஆனால், இதையெல்லாம் பற்றி விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு தெரிந்ததால்தான் அரசியல் வேண்டாம் என்று சொல்லிய நிலையில், இருவருக்கும் ஒரு கருத்து வேறுபாடு போய்க்கொண்டிருக்கிறது என்று பாண்டியன் பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம் என்பதைவிட பக்குவம் நிறைந்த விவேகம் இருக்க வேண்டும். அப்போது தான், அரசியலில் வெற்றியை பார்க்க முடியும். இவர் அரசியல் கட்சியை அறிவித்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ரெஸ்ட் கொடுத்திருக்கிறார் என்றால், அதில் இருந்தே அவருடைய தமிழக வெற்றி கழகம் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது எந்த நடிகை கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்க தெரிந்தவருக்கு அரசியலில் நாம் தகுதி பெற்று இருக்கிறோமா என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டார். நான் உறுதியாக சொல்கிறேன் அவருக்கு அரசியலில் வருவதற்கு லாய்க்கு இல்லை“ என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார்.

Read More : வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்..!! அசத்தும் மின்சார ஆட்டோ..!! வாங்கப்போறீங்களா..? விலையை தெரிஞ்சிக்கோங்க..!!

Advertisement