’மிதிலி’ புயல் எதிரொலி..!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!
வங்கக் கடலில் ’மிதிலி’ புயல் உருவாகியுள்ளதை அடுத்து தமிநாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளதாகவும், இந்த புயலுக்கு மிதிலி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி சென்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மிதிலி புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில், 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.