முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெல்லையில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு... 9 பெட்டிகள் சேதம்..! போலீசார் தீவிர விசாரணை...!

09:44 AM Feb 05, 2024 IST | 1newsnationuser2
Advertisement

நெல்லையில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற.

Advertisement

நெல்லை, வாஞ்சி மணியாச்சி அருகே சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதில் 9 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் இயங்கும் நேரம்

இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 10.40 மணிக்கு வந்து சேரும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 6 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

தண்டனை

ரயில் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி சேதத்தை ஏற்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Tags :
nellaipolice investigationVantae Bharath
Advertisement
Next Article