கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..! ஒரு நாளில் 2 முறை மட்டுமே தரிசனம்..! எங்கு உள்ளது தெரியுமா.?!
பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் 2 முறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும். மிகவும் பழமையான சக்தி வாய்ந்த கோவிலாக கருதப்படும் இக்கோயில் கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய கோயிலாக இருந்து வருகிறது. அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்த சிவன் கோவில் கடலில் அலை குறைவாக இருக்கும் பொழுது மட்டுமே தோன்றும்.
அதிக அலை ஏற்படும்போது கடலுக்கு அடியில் மூழ்கி விடும். இப்படி இந்த கோயில் ஒரே நாளில் இரண்டு முறை மட்டுமே தெரிவதால் அப்போது மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கோயிலின் கட்டிடக்கலையை பல வெளிநாட்டவர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.