முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மிக்ஜாம்’ புயல்..!! களமிறங்கிய தமிழ்நாடு அரசு..!! தயார் நிலையில் 18,000 போலீசார்..!!

05:12 PM Dec 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 710 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

Advertisement

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், `மிக்ஜாம்’ புயல் பாதிப்பை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. புயல் பாதிப்புகளை சமாளிக்க ஏடிஜிபி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு பகுதிகளாக பிரிந்து பல்வேறு இடங்களில் முகாமிட்டு உள்ளனர். நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் பயிற்சி பெற்ற 900 போலீசார் 18 குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை, கோவை, மணிமுத்தாறு பகுதிகளுக்கு தலா 3 குழுக்களும், கடலூருக்கு 2 குழுக்களும் அனுப்பி வைப்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, பழனி பகுதிகளுக்கு தலா ஒரு மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 164 மீட்பு உபகரணங்கள் மற்றும் 20 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட எஸ்பிக்கள் உடனும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற 18,000 போலீசாரும் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
தமிழ்நாடு அரசுமிக்ஜாம் புயல்
Advertisement
Next Article