"ஃபெங்கல் புயல் 36 மணிநேரம் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும்"..!! டெல்டா மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை எச்சரிக்கை..!!
வங்கக்கடலில் இன்று பிற்பகல் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாகையில் இருந்து 420 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 530 கிமீ தொலைவிலும் நிலவி வருகிறது.
இது அடுத்த 6 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளார். இதனால் டெல்டா பகுதியில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்த புயல் 36 மணிநேரம் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் என்றும் அப்போது, திருவாரூர், காரைக்கால், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மிக அதி கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளார்.
நவம்பர் 27, 28ஆம் தேதி மட்டுமின்றி, டிசம்பர் 1ஆம் தேதி வரை நாகை முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
Read More : ”இந்த விஷயத்தில் பயணிகள் சொல்வதை கேட்காதீங்க”..!! அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரை..!!