For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரை.." மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.! - சுகாதாரத் துறை அமைச்சகம்.!

02:31 PM Jan 18, 2024 IST | 1newsnationuser7
 ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரை    மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு     சுகாதாரத் துறை அமைச்சகம்
Advertisement

ஆன்ட்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவது பல்வேறு விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அதிகமாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக புதிய எச்சரிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அதற்கான காரணம் அறிகுறிகள் மற்றும் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றையும் மருந்து சீட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

Advertisement

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹெல்த் சர்வீசஸ் இயக்குனர் அதுல் கோயல்" மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து மருத்துவர் களுக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மருத்துவர்கள் மட்டுமின்றி பார்மசிஸ்ட்களும் மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட ஹெச் மற்றும் ஹெச் 1 விதிகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி அங்கீகரிக்கப்பட்ட மருந்து சீட்டில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் மருந்துகளை பரிந்துரைத்ததற்கான காரணம் மற்றும் விளக்கங்களை மருத்துவர்கள் எழுதி இருந்தால் மட்டுமே அது தொடர்புடைய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஆன்ட்டி மைக்ரோபியல் மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் நோய்க் கிருமிகள் மருந்துகளை எதிர்த்து போராடக் கூடிய தன்மையை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். வீரியமிக்க புதிய ஆண்டிபயாட்டிக் மருந்துகளின் தயாரிப்பிற்கான ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் ஆன்ட்டி மைக்ரோபியல் மருந்துகளை விவேகமாக பயன்படுத்துவது தான் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட சிறந்த வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோய்க்கிருமிகள் மருந்துகளை எதிர்த்து போராடக்கூடிய தன்மையைப் பெறும் ஆன்ட்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்பது உலக அளவில் பொது சுகாதாரத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி பாக்டீரியாவின் ஆன்ட்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் தன்மையால் உலகளவில் 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4.95 மில்லியன் மக்களின் இறப்பிற்கு மருந்துகள் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபிஎல் ரெசிஸ்டன்ஸ் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்ட்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் பண்புகளால் நவீன மருத்துவத்தின் பல நன்மைகள் ஆபத்தாக முடிகிறது. இது எதிர்ப்பு நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு எதிராக திறம்பட சிகிச்சை அளிப்பதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் நோயின் பாதிப்பு நீண்ட காலத்திற்கு ஏற்படுவதோடு இறப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. சிகிச்சை முறையில் ஏற்படும் தோல்வியால் நோய் தொற்று நீண்ட காலம் தாக்குவதற்கான அபாயமும் இருக்கிறது. இதனால் இரண்டாம் நிலை மருந்துகளின் அதிக விலை காரணமாக பல நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகும்.

மருத்துவக் கல்லூரிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பேசிய கோயல் " மருத்துவக் கல்லூரிகள் நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவத்தை வழங்குவதோடு வருங்கால தலைமுறை மருத்துவரின் கல்விக்கான மையமாகவும் விளங்கி வருகின்றன. மருத்துவக் கல்லூரிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை நியாயமான வகையில் பயன்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் இந்தப் பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்ள இருக்கும் இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு ஒரு உதாரணத்தை ஏற்படுத்தலாம் என தெரிவித்திருக்கிறார் .

Tags :
Advertisement