For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி ஆண்களுக்கும் மாதம் ஆயிரம் உதவித்தொகை..!! - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Minister Perugaruppan has said that men will also be given stipend of 1,000 per month to women.
10:52 AM Aug 10, 2024 IST | Mari Thangam
இனி ஆண்களுக்கும் மாதம் ஆயிரம் உதவித்தொகை       அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
Advertisement

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவது போல் விரைவில் ஆண்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் பெருகருப்பன் கூறியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த தொகை சென்று சேரும் என்பதால் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்குவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், “திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்” என்று பேசினார்.

Read more ; வெடித்து சிதறிய சீன ராக்கெட்..!! நடுவானில் நொறுங்கிய விண்வெளி கனவு!!

Tags :
Advertisement