அமைச்சர் முத்துசாமியின் துறைகள் பறிப்பு..! செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு உள்ளியிட்ட மூன்று துறைகள் ஒதுக்கீடு..!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் உட்பட 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார்.
ஊழல் வழக்கில் கைது செய்யபட்டு, ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்ததை அடுத்து அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு அவர் முன்னாள் வகித்து வந்த மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறைகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறைகள் பறிக்கப்பட்டு செந்திலாபாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த மூன்றே நாட்களில் அவர் வகித்த வந்த துறைகள் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துறை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில் முதுவிலக்குத்துறை பற்றி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் முதல் துணை முதலமைச்சர் வரை.. உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை..!!