முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அசைவ ராமாயணத்தை, சைவ ராமாயணமாக மாற்றியவர் கம்பன்..!!" - அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Minister Duraimurugan said that Kampan was the one who changed the non-Saiva Ramayana written by Valmiki into Saiva Ramayana.
02:24 PM Aug 10, 2024 IST | Mari Thangam
Advertisement

அசைவம் சாப்பிடும் ராமர், சீதையை சைவம் சாப்பிடுபவர்களாக கம்பன் மாற்றியதாக அமைச்சர் துரைமுருகன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை கம்பன் கழகம் சார்பில் 50வது ஆண்டு கம்பன் விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர். துரைமுருகன், " சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களுக்குப் பின்புதான் அதை எழுதியவர்கள் பெயர் குறிப்பிடப்படும். ஒரு புகழ்பெற்ற காவியத்துக்கு முன்பு அதை எழுதியவரின் பெயர் இடம்பெற்றது கம்பராமாயணம் மட்டும் தான்.

தமிழில் 12 நூற்றாண்டுகளாக கம்பர் நிலைத்து வாழ்கிறார். தனது எழுத்தில் அறத்துக்கும் மறத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டும் திறமை கம்பருக்கு மட்டும்தான் உள்ளது. வால்மீகி ராமரை ஒரு வீர மானிடராகவே படைத்தார். ராமர் சீதை அசைவம் சாப்பிடுபவர்களாக படைத்தார். ஆனால் கம்பர் அவர்களை சைவம் சாப்பிடுபவர்களாக, முழு சைவ ராமாயணமாக மாற்றிவிட்டார்" என்று கூறினார்.

Read more ; காசா-வில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!! – 100 க்கும் மேற்பட்டோர் பலி

Tags :
KampanMinister duraimuruganramayanam
Advertisement
Next Article