முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாநில சிலபஸ் தரம் மோசமா இருக்கு..!! - ஆளுநர் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்கள்..!!

Minister Anbil Mahes Poiyamozhi and Minister Ponmudi have responded to the controversy when the governor said that the state curriculum is worse compared to the national curriculum
01:41 PM Sep 02, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அளுநர் மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்தரம் குறைவாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்குப் பார்வையை வளர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். ஆளுநரின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி பேசுகையில் , "2006ஆம் ஆண்டிலேயே சமச்சீர் கல்வி கொண்டுவந்தது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆய்வாளர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் இன்று உலகை ஆளும் பலர், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியை பயின்றவர்கள் தான். உலகத்தரமுடிய நம் மாநிலக் கல்வி, CBSEI விடவும் சிறந்தது. அவ்வகையில், தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில் , "அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே மாநில பாடத்திட்டத்தை பாராட்டுகின்றனர். எனினும், ஆளுநர் தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அவரை எங்கும் அழைத்து சென்று நிரூபிக்க தயார்" என சவால் விடுத்துள்ளார்.

Read more ; அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் மரணம் கூட நிகழும்..!! ஆரோக்கியமாக இருக்க இதை பண்ணுங்க..!!

Tags :
அமைச்சர் அன்பில் மகேஷ்ஆளுநர் ஆர் என் ரவி
Advertisement
Next Article