”மினரல் வாட்டர் ஆபத்தானது”..!! கடுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள FSSAI உத்தரவு..!!
மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மினரல் வாட்டரை "அதிக ஆபத்துள்ள உணவு" பிரிவில் சேர்த்துள்ளது. FSSAI அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் அறிவிப்பால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, மினரல் வாட்டர் தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை என்று அர்த்தமல்ல.
மாறாக, இது கடுமையான பாதுகாப்பு சோதனைகளை உறுதி செய்கிறது என்பதே இதன் பொருள் என நிபுணர்கள் கூறுகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தரம் மற்றும் பாதுகாப்பை பராமரிக்க தங்கள் தயாரிப்பை கட்டாயம் தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
பி.ஐ.எஸ். சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை நீக்கக்கோரி பாட்டில் குடிநீர் நிறுவனங்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, பி.ஐ.எஸ். சான்றிதழ் நீக்கப்பட்டு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தனது கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளது.