மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு..!! ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி குறைப்பு..?
நாடாளுமன்றத்தில் 2025 பிப்ரவரியில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், இப்போதே பல கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகியிருக்கும் சூழலில், மத்திய அரசு வரியை குறைத்து மக்கள் கையில் அதிக பணத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு முக்கியமான அறிவிப்பை தான் மத்திய அரசு வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் பட்ஜெட் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இந்த பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி குறைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிதி நிவாரணம் அளித்து, மந்தமாகி வரும் பொருளாதாரத்தைத் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரியை குறைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நகர்ப்புறங்களில் வசிக்கும் பல கோடி மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். தற்போதைய வரி விதிமுறைகளின்படி, ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்கள் 5% முதல் 20% வரை வரி செலுத்த வேண்டும். ரூ.15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் 30% வரி விதிக்கப்பட்டு வருகிறது.