முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Wow!... சேலத்தில் வானிலை மையம்!… முன்னறிவிப்பை துல்லியமாக கணிக்க புதிய ரேடார்கள் பொருத்த திட்டம்!

05:45 AM Apr 27, 2024 IST | Kokila
Advertisement

Salem: வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக கணிப்பதற்காக சேலம், ராமநாதபுரத்தில் புதிய ரேடார்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவை பொருத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி ஆகிய ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் வாயிலாக முன் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம், அமெரிக்கா உருவாக்கிய உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு (Global Forecast System, GFS) என்ற மாடலை பின்பற்றி வானிலை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்தநிலையில், தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அசவுகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். வானிலை முன்னறிவிப்பை துல்லியத்துடன் கணிக்க தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் தலைவர் மிருத்யுஞ்செய மொகபத்ரா கூறுகையில், ‘‘ஏற்கனவே துறைமுகங்கள், மற்றும் என்ஐஓடி வளாகங்களில் ரேடார்கள் உள்ளன.

காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் தலா 2 உள்ளன. இது தவிர கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரேடார்களும் தமிழ்நாட்டின் சில இடங்களையும் சேர்த்து கணித்து வருகின்றன. பெங்களூரில் உள்ள 2 எக்ஸ்-பேண்ட் ரேடார்கள் மற்றும் சி-பேண்ட் ரேடார்கள மூலம் இன்னும் சில மறைமுக ரேடார்களும் தமிழ்நாட்டின் வானிலையை கணித்து வருகின்றன.

அதனால், வானிலை அமைப்புகளை கண்காணிப்பதில் ரேடார்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் தமிழ்நாடு அரசு இணைந்து இரண்டு ரேடார்களை மேம்படுத்தியுள்ளன. இவற்றின் மூலம் தென் மாவட்டங்களில் வானிலை நிலவரங்களை நாம் கண்காணிக்க முடியும். இந்த ரேடார்கள் ஏறக்குறைய 1000 தானியங்கி வானிலை நிலையங்களையும் விரிவாக்கம் செய்கின்றன. இவற்றின் மூலம் துல்லியமான மற்றும் மேம்பட்ட வானிலை புள்ளி விவரங்களை பெற முடியும்’’ என்று தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ‘‘சேலம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் அதிகபட்ச பரப்பளவை கண்காணிக்கும் வகையில் ரேடார்களை பொருத்துவதற்கும், மின்காந்த குறுக்கீடு இல்லாமல் அவை வேலை செய்வதற்குமான பரிட்சார்த்த பணிகள் தற்போது நடக்கிறது’’ என்றார். இதுதவிர நீண்டகாலம் பணியாற்றிய பின் நீக்கவேண்டிய நிலையில் சென்னை துறைமுகம், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள ரேடார்களை நீக்கிவிட்டு புதிய ரேடார்கள் பொருத்தும்பணி நடக்கிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் புயல்களை கண்காணிப்பதற்காக 4 எஸ்-பெண்ட ரேடார்களை பொருத்தவும் இந்திய வானிலை மையத்துக்கு எண்ணம் இருப்பதாக வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘கணினி சக்தியை பயன்படுத்தும்போது, வானிலை மாதிரிகளின் முடிவுகள் குறிப்பிட்ட அளவில் மேம்பட வாய்ப்புள்ளது. இவை 5 மாதங்களில் மேம்படுத்தப்படும். அத்துடன் வானிலை முன்னறிவிப்புகளுக்கு மாதிரிகளும், கண்காணிப்புகளும் முக்கியமானவை. தற்போது 10 கிமீ முதல் 20 கிமீ தூரத்துக்கான தெளிவான மாதிரி முடிவுகள் இருக்கின்றன. கணினியின் வேகத்தை அதிகரிக்கும் போது 6 கிமீட்டருக்கான தெளிவான முடிவுகளை அடுத்தஆண்டில் பெற முடியும். ஆனால் நமது நோக்கமே 1 கி.மீ.க்கான தெளிவான முடிவுகளை எட்டுவதுதான்’’ என்றார்.

Readmore: பெண்களே!… இந்திய நாப்கினால் புற்றுநோய் ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Advertisement
Next Article