வாகன ஓட்டிகளே..!! இது உங்களுக்கு தெரியுமா..? 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெறலாம்..!! எப்படி தெரியுமா..?
பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்க முடியும். எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைக்கப்பட்டாலும், உண்மையில் பொதுமக்களால் இந்த விலையையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வருமானம் குறைவாக இருக்கும் சூழலில், நாள்தோறும் பெட்ரோல் வாங்குவது உண்மையில் சிரமமான காரியம்தான். ஆனால், நீங்கள் விரும்பினால், ஆண்டுக்கு 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்க முடியும். Indian Oil HDFC Bank Credit Card நீங்கள் பயன்படுத்தினால், இது சாத்தியம்தான்.
HDFC வங்கி கொடுக்கும் Indian Oil கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பெட்ரோல் நிரப்பும்போது, நீங்கள் செலவழித்த தொகையில் 5% பணம் எரிபொருள் பாய்ண்ட்களாக (Fuel Points) கிடைக்கும். இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளை பயன்படுத்தும்போதுதான் இது கிடைக்கும். முதல் 6 மாதங்களில் அதிகபட்சம் 50 எரிபொருள் புள்ளிகள் கிடைக்கும். 6 மாதங்களுக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களுக்கு பெட்ரோல் நிரப்பும்போது, அதிகபட்சமாக 150 புள்ளிகளைப் பெறலாம். இத்துடன், மற்ற இடங்களில் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது, ஒவ்வொரு முறை 150 ரூபாய் செலவழிக்கும்போதும், ஒரு எரிபொருள் புள்ளி கிடைக்கும்.
இதனைப் பயன்படுத்தி, ஆண்டுக்கு 50 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கு முதலில், HDFC வங்கியின் Indian Oil கிரெடிட் கார்டை வாங்க வேண்டும்.
Read More : ஜிம்முக்கு செல்லும் பெண்களே உஷார்..!! கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து உல்லாசம்..!! வீடியோ எடுத்து மிரட்டல்..!! சென்னையில் அதிர்ச்சி..!!