அதிர்ச்சி.! பயனர்களின் தகவல்களை ரகசியமாக கண்காணித்த FACEBOOK.! வெளியான பரபரப்பு ரிப்போர்ட்.!!
ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் அமேசான் பயனர்களை மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்கள் ரகசியமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டி புதிய ஆவணத்தை கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
டெக் க்ரன்ச் என்ற நிறுவனத்தின் தகவலின் படி 2016 ஆம் வருடம் பேஸ்புக் நிறுவனம் கோஸ்ட் பஸ்டர் என்ற ப்ராஜெக்ட் துவங்கி இருக்கிறது. இந்த புதிய ப்ராஜெக்ட் படி ஸ்னாப்சாட் செயலி மற்றும் அதன் சேவையகங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு இடையேயான நெட்வொர்க் போக்குவரத்தை இடைமறித்து மறைமுகமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது.
பயனர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்வதற்கும் ஸ்னாப்சாட் செயலியை விட அதிகமான போட்டித் தன்மையை பெறுவதற்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த முறையை பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இந்தத் திட்டம் குறித்த ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களுக்கிடையேயான மின்னஞ்சல் பதிவுகளும் இடம் பெற்றுள்ளது. ஜூன் 9, 2016 தேதியிட்ட மின்னஞ்சலில் பேஸ்புக் நிர்வாக இயக்குனர் மார்க் ஜூகர்பெர்க் ஸ்னாப் சாட் செயலியின் பாதுகாப்பையும் மீறி பகுப்பாய்வுகளைப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள மின்னஞ்சலில் "''ஸ்னாப்சாட்டைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால் அதற்கான பதில் நம்மிடம் இல்லை.அவை எவ்வளவு விரைவாக வளர்ந்து வருகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, அவற்றைப் பற்றிய நம்பகமான பகுப்பாய்வுகளைப் பெற புதிய வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம். இவற்றை சரி செய்வதற்கு பேனல்களை உருவாக்க வேண்டும் அல்லது புதிய சாஃப்ட்வேர் எழுத வேண்டும் என்பதை நீங்கள் தான் விரைவாக முடிவெடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
குறிப்பிட்ட துணை டொமின்களின் டிராபிக்கை இடைமறிக்க ஒனாவோவைப் பயன்படுத்துவதற்கு ஃபேஸ்புக் பொறியாளர்கள். முன்மொழிந்தனர். இவற்றிற்கு பிறகு ஒரு மாதம் கழித்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செல்போன்களில் தரவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய கருவிகளை வழங்கினர். பொதுவாக என்க்ரிப்ட்இந்தக் கருவிகள் குறிப்பிட்ட துணை டொமைன்களுக்கான ட்ராஃபிக்கை இடைமறித்து படிப்பதன் மூலம், ஆப்ஸ் பயன்பாட்டைப் பகுப்பாய்வு செய்தது.
பின்னர் இந்தத் திட்டம் யூடியூப் மற்றும் அமேசான் போன்ற செயலிகளுக்கு எதிராகவும் செயல்படுத்தப்பட்டது.. நீதிமன்றத் தாக்கல்களின்படி, ப்ராஜெக்ட் கோஸ்ட்பஸ்டர்ஸில் மூத்த நிர்வாகிகள் மற்றும் 41 வழக்கறிஞர்கள் இந்தப் ப்ராஜெக்ட்டில் பணியாற்றி இருக்கின்றனர்.
ஒனாவோவின் ஆராய்ச்சித் திட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு ஸ்னாப்சாட் செயலியின் விரிவான செயல்பாட்டை பற்றி அறிய முடியும் என மற்றொரு மின்னஞ்சல் தெரிவிக்கிறது. அனைத்து பேஸ்புக் ஊழியர்களும் ப்ராஜெக்ட் கோஸ்ட் பஸ்டருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று கூறி விட முடியாது. ஃபேஸ்புக்கின் அப்போதைய உள்கட்டமைப்பு இன்ஜினியரிங் தலைவரான ஜெய் பரிக் மற்றும் பாதுகாப்புப் பொறியியல் துறையின் அப்போதைய தலைவரான பெட்ரோ கனாஹுவாட்டி உட்பட சில ஊழியர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியதோடு இந்தத் திட்டம் குறித்த அதிருப்தியையும் தெரியப்படுத்தினர்.
ஓனாவோவைப் பயன்படுத்துவதற்காக இளம் வயதினருக்கு ஃபேஸ்புக் ரகசியமாக பணம் செலுத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, 2019 ஆம் ஆண்டு ஒனாவோவை ஃபேஸ்புக் நிறுவனம் நிறுத்தியது. மேலும் இதன் மூலம் இளம் வயதினரின் இணையதள நடவடிக்கைகளை ஃபேஸ்புக் கண்காணித்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.