For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஃபேஸ்புக் - இன்ஸ்டாகிராம் கனெக்சனை கட் செய்த மெட்டா.! புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் இணையவாசிகள்.!

06:25 AM Dec 08, 2023 IST | 1newsnationuser4
ஃபேஸ்புக்    இன்ஸ்டாகிராம் கனெக்சனை கட் செய்த மெட்டா   புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் இணையவாசிகள்
Advertisement

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒரு சேவையை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது இணையதளவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் கடந்து 2020 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. அப்போது பேஸ்புக் மெசஞ்சர் வசதியை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு கால் மற்றும் குறுஞ்செய்திகள் செய்யும் வசதி இருந்தது. மேலும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும் மெசேஜ் செய்து கொள்ளலாம். இந்த சேவைகளுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பும் இருந்து வந்தது..

இந்நிலையில் இந்த வருடத்துடன் அந்த சேவையை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டிலிருந்து பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தி இன்ஸ்ட்டா பையனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. மேலும் பழைய குறுஞ்செய்திகளை மட்டுமே படிக்க முடியும். இது சமூக வலைதளவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement