For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

" Facebook, Instagram, Threads-ல் உருவாக்கப்படும் 'AI' கன்டண்டுகளுக்கு புதிய குறியீடு.."! பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 'மெட்டா'வின் திட்டம்.!

10:17 AM Feb 07, 2024 IST | 1newsnationuser4
  facebook  instagram  threads ல் உருவாக்கப்படும்  ai  கன்டண்டுகளுக்கு புதிய குறியீடு     பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு  மெட்டா வின் திட்டம்
Advertisement

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட் புகைப்படங்கள் லேபிள் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. 'AI' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை அப்லோட் செய்யும் போது அவை இதன் மூலம் உருவாக்கப்பட்டது என்ற அம்சத்தையும் மெட்டா நிறுவனம் சேர்த்து வெளியிடும். மக்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த தவறினால் அபராதத்தை சந்திக்க நேரிடும் எனவும் மெட்டா நிறுவனம் எச்சரித்து இருக்கிறது. மேலும் மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் வெளியிடப்படும் கண்ட்ண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க லேபிளை சேர்க்கலாம் எனவும் வெட்டா தெரிவித்துள்ளது.

Advertisement

டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மெட்டா நிறுவனம் அவை உருவாக்கப்பட்ட விதம் குறித்து லேபிள் கொடுக்கும். பயனர்கள் தங்களது கண்டன்ட் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதை அப்லோட் செய்யும் போது குறிப்பிட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் கண்டெண்டுகள் மக்களை தவறாக வழி நடத்தும் மற்றும் ஆபத்துக்களை கொண்டிருந்தால் மக்களின் தெளிவுக்காக அந்த கண்டன்டுகளை பற்றிய குறிப்பிட்ட லேபில் வழங்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் அதிகமான பயனர்களை கொண்டிருக்கிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் கன்டென்டுகளை அடையாளம் காண்பதற்கான பொதுவான தரத்தை உருவாக்கா மிட்டா தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 'AI' தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்களுடன் ஒத்துழைப்பதும் இதில் அடங்கும்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கண்டன்டுகளை அடையாளம் காண மைக்ரோசாப்ட் கூகுள் அடோப் ஷட்டர் ஸ்டாக் மிட் ஜர்னி மற்றும் ஓபன் 'AI' போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மெட்டா செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு IPTC மெட்டாடேட்டா மற்றும் கண்களுக்கு புலப்படாத வாட்டர் மார்க்ஸ் போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துகிறது.

'AI' தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கன்டென்ட் மிகவும் அதிகமாக இருப்பதால், செயற்கை மற்றும் செயற்கை அல்லாத கன்டென்டை எவ்வாறு அங்கீகரிப்பது என்பது குறித்த விவாதங்களை மெட்டா எதிர்பார்க்கிறது. AI உருவாக்கிய கன்டென்ட் அடையாளம் காண தொழில்துறையில் முன்னணி கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கன்டென்டுகள் மற்றும் 'AI' தொழில்நுட்பம் இல்லாமல் உருவாக்கப்பட்ட கன்டென்டுகள் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்கான வழிமுறைகளை தொழில்துறையினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் செயல்படுத்தலாம் என்பதை மெட்டா ஒப்புக்கொள்கிறது. மேலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப தயாராகி வருவதாகவும் மெட்ரா தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் வர இருக்கின்ற தேர்தலில் அரசியல் தொடர்பான கன்டென்டுகள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியாகும் என்பதால் அவற்றின் தரம் பிரித்து லேபிள் வழங்க மெட்டா முடிவு செய்து இருக்கிறது.

Tags :
Advertisement