For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் மெட்டா நிறுவனத்தின் சிறப்பு மையம்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Meta company's specialty center at 5 locations including Chennai
08:29 AM Oct 28, 2024 IST | Vignesh
சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் மெட்டா நிறுவனத்தின் சிறப்பு மையம்      மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் இரண்டு முக்கிய முயற்சிகளைத் தொடங்குவதற்காக மெட்டா உடனான தனது கூட்டாண்மையை அறிவித்தது. திறன் இந்தியா பணிக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளர் மற்றும் ஹைதராபாத், பெங்களூரு, ஜோத்பூர், சென்னை மற்றும் கான்பூரில் அமைந்துள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் 5 சிறப்பு மையங்களை நிறுவ உள்ளது.

Advertisement

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, "இன்றைய போட்டி நிறைந்த சூழலில் செழித்து வளர தேவையான திறன்களுடன் இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அமைச்சகத்தின் நோக்கம் என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, காணொலி வாயிலாகவும் கலப்பு முறையிலும் தொழில்நுட்பங்களை, திறன் இந்தியா சூழல் அமைப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பாதைகளை செயல்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான அணுகலை பரவலாக்குகிறோம்.

மெட்டாவுடனான எங்கள் கூட்டாண்மை இந்த இலக்கை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று அவர் தெரிவித்தார். திறன் இந்தியா டிஜிட்டல் தளம் நாட்டின் திறன் சூழல் அமைப்பின் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது, மில்லியன் கணக்கான மாணவர்கள் தங்கள் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட படிப்புகளை அணுகுகின்றனர் என்றார்.

Advertisement