மாஸ் காட்டும் மெட்டா AI!. இனி ஹிந்தி உட்பட 7 மொழிகளில் கிடைக்கும்!.
Meta AI: ஆங்கிலத்தில் மட்டும் செயல்பட்டு வந்த மெட்டா ஏஐ தற்போது, ஹிந்தி உட்பட 7 மொழிகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது. அந்தவகையில், மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான மெட்டா ஏஐ கடந்த ஜூன் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்டா நிறுவன சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப், மெசஞ்சர் பயனர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டை பயன்படுத்த முடியும். மேலும் இந்த வசதியை மெட்டா ஏஐ வலைதளத்திலும் பயன்படுத்தலாம். இது சமீபத்திய தொழில்நுட்பமான லாமா-3 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டா ஏஐ இந்தியாவின் பொதுதேர்தலை முன்னிட்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றாட பணிகள், கற்றல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மெட்டா ஏஐ உதவும் என மெட்டா நிறுவனம் தெரிவித்திருந்தது. ஜூன் மாதம் ஆங்கில மொழியில மட்டுமே அறிமுகமான நிலையில் தற்போது இந்தி, போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: மகிழ்ச்சி…! ரூ.25,000 ஆக தொகுப்பூதியம் உயர்வு… மார்ச் – 2025 வரை தொடர தமிழக அரசு அரசாணை…!