முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அச்சுறுத்தும் வவ்வால்கள்!… மீண்டும் நிபா வைரஸ் அலெர்ட்!… பதற்றத்தில் கேரள மக்கள்!

07:43 AM Nov 03, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மூணாறு அருகே உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பறப்பதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்கிய நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், இந்தியாவில் தற்போது வடகிழக்கு பருவமழை மிகத் தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனால் பருவமழைக்கு முன்பே பருவகால நோய்களான டெங்கு, நிபா வைரஸ் ஆகியவை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் டெங்குவால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சுகாதாரத் துறை காய்ச்சல் முகாம்கள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலமா கேரளாவில் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும், வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில், அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை மந்திரியும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மூணாறு எம்.சி.காலனியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து உடனடியாக வவ்வால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
KeralaNipah virus alertஅச்சுறுத்தும் வவ்வால்கள்பதற்றத்தில் கேரள மக்கள்மீண்டும் நிபா வைரஸ் அலெர்ட்
Advertisement
Next Article