ஆண்கள் இந்த உணவை தொடவே தொடாதீங்க!! விந்துணுக்கள் குறையுமாம்!!
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் போன்ற உணவுகளை சாப்பிடுபவர்களைவிட, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவு என்பது தெரிய வந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். இந்த உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவை என்னென்ன உணவுகள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
1)சோயா பொருட்கள்:
சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens) அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
2) பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:
மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது. அதனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதே ஆய்வுகளில், சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை.
3) டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், ஆண்களுக்கு இது விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் என 2011 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
4) ஜங்க் உணவுகள் அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்கள் அதிக அளவு பர்கர், பீட்சா போன்ற உணவுகளை, அதிகமாக சாப்பிடுகின்றனர். அவற்றை ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் சேர்க்கப்படும் ஆரோக்கிய சீர்கேடு விளைவிக்கும் பொருட்கள் ஆண்களின் ஆண்மை தன்மையை குறையச் செய்கிறது. மேலும் ஜங்க் உணவுகள் அதிகமான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவாக இருக்கிறது. அதனால் ஆண்கள் இவற்றை உண்டு உடல் எடை அதிகரித்து விடுகின்றனர்.இது ஆண்மையின் சிதைவுக்கு காரணமாக அமைகிறது.
5) பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ பூச்சிக்கொல்லிகளை நாம் நேரிடையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நல்ல விளைச்சல் கொடுக்கும் பயிர்களில் பயன்படுத்தப்படும், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள், நாம் உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உணவில் சேருகின்றன. இந்த இரசாயனம் சோயாவில் உள்ள பைட்டோ எஸ்ட்ரோஜன்களைப் போலவே, ஜீனோ ஈஸ்ட்ரோஜன்களும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
Read More: “கெஜ்ரிவால் காங்கிரஸின் பொத்தானை அழுத்துவார், நான் ஆம் ஆத்மியின் பொத்தானை அழுத்துவேன்”- ராகுல் காந்தி!