ஆண்களே உஷார்..!! இந்த பெண்ணிடம் நீங்களும் ஏமாந்துறாதீங்க..!! பல ஆண்களுடன் உறவு..!! யார் இந்த சந்தியா..?
30 முதல் 40 வயதான திருமணம் ஆகாத ஆண்களைக் குறிவைத்து திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தியா என்ற பெண்ணை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு பல மாதங்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் மேட்ரிமோனி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (30) என்பவர் விக்னேஷுக்கு அறிமுகமாகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போது, தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்திருக்கிறார். தமிழ்ச்செல்வியையும் விக்னேஷுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இருவருக்கும் நன்கு பழக்கம் ஏற்பட்ட சூழலில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனவும் வீட்டில் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு விக்னேஷை சந்தியா வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி தலைமையில் இவருக்கும் ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை விக்னேஷின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். விக்னேஷின் பெற்றோர் தங்கள் மருமகள் என கருதி 12 பவுன் நகையையும் சந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
திருமணாகி சில நாள்களே ஆன நிலையில், சந்தியாவின் நடவடிக்கையில் விக்னேஷுக்கு சந்தேகம் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் சந்தியாவின் ஆதார் கார்டை தேடி அதை பார்த்தபோது தான் அவர் தலையில் இடியே விழுந்துள்ளது.
அதில், கணவர் பெயர் என்ற இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், சந்தியாவின் வயது சொன்னதை விட அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் சந்தியாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கோபமடைந்த சந்தியா, அவரது குடும்பத்தையே மிரட்டியுள்ளார்.
இதில் உஷாரான விக்னேஷ், சந்தியாவிடம் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என சமாதானமாக பேசி ஒருவழியாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சந்தியா அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போலீஸார் சந்தியாவின் பின்னணி குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதில்தான் பல அதிர்ச்சிகரமான விஷயம் தெரியவந்தது. சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது.
30 முதல் 40 வயதான திருமணம் ஆகாத ஆண்களைக் குறிவைத்து சந்தியா இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததையும், அதற்கு இடைத்தரகர் போல் தமிழ்செல்வி இருந்ததும் தெரியவந்தது. சென்னையை சேர்ந்த கணவன், விக்னேஷ் மட்டுமின்றி காவல் உதவி ஆய்வாளர், மதுரையில் ஒரு காவலர், ஈரோடு கொடுமுடியில் ஒரு இளைஞர் என பலருடன் திருமண உறவில் இருந்துள்ளார் சந்தியா. இதில், பலரையும் ஏமாற்றி பணம், நகைகளை எடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பலரும் இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்ததால் இதுநாள் வரை சிக்காமல் இருந்துள்ளார்.
30 முதல் 40 வயதான திருமணம் ஆகாதவர்களை குறித்து வைத்து திருமணம் செய்து, திருமண உறவில் மனைவியாக சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டு நகை மற்றும் பணத்துடன் சந்தியா தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதே பாணியில், பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளார் என கூறப்படுகிறது. இதற்கு தமிழ்ச்செல்வி உடைந்தாயாக இருந்ததும் நடத்தி வருகின்றனர்.