பிரதமரின் தியானம்!… விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இத்தனை வசதிகளா?
Vivekananda Rock Memorial: லோக்சபா தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) மாலை தமிழகத்தில் புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய மோடி, பகவதி அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, படகு சேவை மூலம் ராக் நினைவிடத்தை அடைந்து தியானத்தைத் தொடங்கினார். பிரதமரின் தியான பயிற்சி ஜூன் 1ம் தேதி வரை தொடரும்.
வேட்டி மற்றும் வெள்ளை சால்வை அணிந்த பிரதமர் மோடி, கோயிலில் பிரார்த்தனை செய்து, கருவறையை வலம் வந்தார். அர்ச்சகர்கள் சிறப்பு ஆரத்தி செய்து, கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது, பின்னர், மாநில அரசின் கப்பல் போக்குவரத்து கழகம் நடத்தும் படகு சேவை மூலம் ராக் நினைவிடத்தை அடைந்த அவர், தியான மண்டபத்தில் தியானம் செய்யத் தொடங்கினார்.
பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புகழ்பெற்ற இந்து துறவியின் (விவேகானந்தர்) பெயரிடப்பட்ட இந்த நினைவுச்சின்னம் கடலின் நடுவில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் பிரதமர் தங்குவது இதுவே முதல் முறை. சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக 2019 லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததையடுத்து, பிரதமர் இதேபோல் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார் . பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தங்கியிருக்கும் நாட்களில் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனுடன், இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்யும் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள சிறப்பம்சங்களின் விபரம் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி, இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இந்த கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதனால் தான் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே சுவாமி விவேகானந்தருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவேகானந்தருக்கு நினைவிடம் அமைத்ததன் பின்னணியில் முக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது.
அதாவது சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கா உலக ஆன்மீக மாநாட்டு பேச்சு என்பது மிகவும் பிரபலம். ‛மை டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' என 1893ம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் தியானம் செய்தார். 1982 டிசம்பரில் விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் நீந்தி அங்குள்ள பாறைக்கு சென்று தியானம் செய்து பாரத மாதாவை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் நினைவாக அந்த பாறையில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
இந்த நினைவு மண்டபம் கட்டும் யோசனையை கூறியவர் ஆன்மீக தலைவரான ஏக்நாத் ரானே. அதன்பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி 1964ல் தொடங்கி 1970ல் முடிவடைந்தது. இங்கு 2 முக்கிய கட்டுமானம் உள்ளது. ஒன்று விவேகானந்தர் மண்டம். இன்னொன்று ஸ்ரீபாத மண்டபம். ஸ்ரீபாத மண்டபத்தை பொறுத்தவரை இந்து தெய்வமான பகவதி அம்மன் கால் பதித்த இடத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 'கர்ப்ப கிரகம்' (சன்னதி), 'உள் பிரகாரம்', வெளிப்பிரகாரம் உள்ளது.
அதேவேளையில் விவேகானந்தர் மண்டபம் என்பது தியான மண்டபம், முக பண்டபம், சபா மண்டபம் உள்ளடக்கி உள்ளது. இதில் 'தியான மண்டபத்தின்' வடிவமைப்பு இந்தியாவின் பல்வேறு கோவில்களின் கட்டமைப்புகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த மண்டபம் 6 அறைகளை கொண்டுள்ளது. கடல் காற்றில் சிதிலமைடையாமல் இருக்கும் வகையிலான கிரானைட் சுவர்களால் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மண்டபத்தின் உள்ளே நல்ல காற்றோட்டம் கிடைக்கும். விளக்குகள் உள்ளன. அதேபோல் 'சபா மண்டபத்தில் 'பிரலிமா மண்டபம்' எனும் இடத்தில் விவேகானந்தர் சிலை உள்ளது. இங்குள்ள சுவாமி விவேகானந்தரின் பார்வை நேரடியாக ஸ்ரீபாத மண்டபத்தை நோக்கி இருக்கும். இந்த ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மன் கால்பதித்த இடம் உள்ளது. பொதுவாக விவேகானந்தர் மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட யாருக்கும் தங்க அனுமதி இல்லை. விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க செல்லும் மக்கள் மாலையில் கரைக்கு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: வார இறுதி நாள்… சென்னையில் இருந்து 1,400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…!