"மருத்துவ நுழைவு தேர்வை மாநில அரசே நடத்த வேண்டும்!!" - மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நீட் PG
நுழைவு தேர்வு ரத்து, நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்
குறித்து டாக்டர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தார்.
டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில், “நீட் இளங்கலை மருத்துவ தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். எனவே, பொறுப்பேற்ற அவர் பதவி விலக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மொழிவாரி மாநிலங்களை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே இனம் , ஒரே தேர்வு என கொண்டு வருகிறார்கள்.
இன்று நாடு முழுவதும் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட்
தேர்வினை மத்திய அரசு இரவோடு இரவாக ரத்து செய்துள்ளது. இது இந்த அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. பல ஆண்டுகளாக மாணவர்கள் தங்களை தயார் செய்து படித்து வருகின்றனர். இதன்மூலம் மத்திய அரசு அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும்.
மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைத்தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெற
வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடிற்கு என்றும் மருத்துவர்
சங்கம் துணை நிற்கும். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களையும் கைப்பற்ற மத்திய அரசு சூழ்ச்சி செய்து இந்த தேர்வை நடத்துகிறது. தமிழ்நாடு அரசின் கீழ் வரும் இளங்கலை, முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர் மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தான் தேர்வு முறைகளை நிர்ணயித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நேர்மையான முறையில் வெளிப்படைத்ததன்மையுடன் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read more ; அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! இனி இவர்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு!! மத்திய அரசு அறிவிப்பு!!