மருத்துவப் படிப்பு..!! அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.
இந்நிலையில் தான், மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% இட ஒதுக்கீடை அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் வழங்கலாம் என உயர்நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது. அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் நகர் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது. அதேபோல், மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Read More : Tamil Web Series | இந்த 8 தமிழ் வெப் சீரிஸ்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!! செம கதை களம்..!!