காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு!. ஆப்கன் அமைச்சர் ஹக்கானி உட்பட 6 பேர் பலி!.
Kabul Explosion: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் தலிபான் அகதிகளுக்கான அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி உட்பட 6 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள தலிபான் அகதிகளுக்கான நலத்துறை அமைச்சரக கட்டிடத்திற்கு சென்ற பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த பயங்கர குண்டுவெடிப்பில், கலீல் ஹக்கானி மற்றும் 6 பேர் பலியானார்கள் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளாார். ஆனால், ஆப்கானிய அரசு அதிகாரிகள் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குண்டுவெடிப்பில் முக்கிய பிரமுகர் ஒருவர் பலியாவது இதுவே முதல்முறையாகும்.
தலிபான் அமைப்பில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய கலீல் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை குண்டுவெடிப்பையும் நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Readmore: உலக செஸ் சாம்பியன்ஷிப்!. வெற்றிபெறுவாரா குகேஷ்?. 13வது சுற்று ‘டிரா’!