முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்: தலைமை பொறுப்பிலிருந்து விலகிய மேரி கோம்!

05:49 PM Apr 12, 2024 IST | Mari Thangam
Advertisement

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை வழி நடத்தும் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார். 

Advertisement

இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.  இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை வழிநடத்தும் தலைமை பொறுப்பில் பதவி வகித்தார். இந்நிலையில், தலைமை பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,  "நாட்டுக்காக சேவை செய்வது எனக்குக் கிடைத்த பெருமை. நான் மனரீதியாக தயாராக இருந்தேன். இருந்தபோதும் மதிப்புமிக்க இந்தப் பொறுப்பை என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். தனிப்பட்ட காரணங்களினால் இந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.டி. உஷா கூறுகையில், “ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரும், IOA தடகள ஆணையத்தின் தலைவருமான மேரி கோம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.  அவரது முடிவையும்,  அவரது தனியுரிமையையும் நாங்கள் மதிக்கிறோம்.  தகுந்த ஆலோசனைக்கு பிறகு மேரி கோமுக்கு பதிலாக பதவி வகிப்பவர் குறித்து அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

Tags :
Mary KomParis Olympics
Advertisement
Next Article