For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிறந்தது மார்கழி..!! இப்படி வழிபட்டால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக அமையும்..!!

As the month of Margazhi begins today, certain rituals we perform will make a huge difference in our lives.
08:00 AM Dec 16, 2024 IST | Chella
பிறந்தது மார்கழி     இப்படி வழிபட்டால் மகிழ்ச்சி  அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக அமையும்
Advertisement

மார்கழி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், நாம் செய்யும் சில குறிப்பிட்ட வழிபாடுகள் நம்முடைய வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Advertisement

இறை வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மாதங்களில் ஒன்று மார்கழி. இந்த மாதத்தில் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம், பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, அனுமனின் திருஅவதார தினம் ஆகியவை வருகிறது. இது தேவர்களின் விடியற்காலை, அதாவது பிரம்ம முகூர்த்த வேளை என சொல்லப்படுவதால் இந்த மாதத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கு இறையருளுடன், தேவர்களின் அருளும் நமக்கு கிடைக்கும்.

வாழ்க்கையிலும் குளுமையை ஏற்படுத்தும் சக்தி படைத்த மாதம் என்பதால் தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, வழிபாடுகள் நடத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து, நீராடி, வாசலில் கோலமிட்டு, வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்றும் வழிபடலாம். அதோடு ஒரு குறிப்பிட்ட வழிபாட்டினை மார்கழி மாதப் பிறப்பன்று செய்வதால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம். நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் மற்றும் உடல் பலம் கிடைக்கும்.

தனுர் சங்கராந்தி எனப்படும் மார்கழி மாதப்பிறப்பன்று பஞ்சதேவர்கள் வழிபாடு செய்வது விசேஷமானது. விநாயகர், சிவன், மகாவிஷ்ணு, துர்க்கை மற்றும் சூரிய பகவானை தான் பஞ்ச தேவர்கள் என்பார்கள். இவர்களில் சூரிய பகவானை மார்கழி மாதம் வழிபடுவது மிகவும் நல்லது. அதிகாலையில் எழுந்து புனித நதிகளில் நீராடி, சூரிய பகவானுக்கு நீர் படைத்து வழிபட வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்து சூரிய பகவானுக்கான மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.

ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், உயர் பதவிகள், தலைமை பதவி, அரசு வேலை, நல்ல ஆரோக்கியத்தை பெற வேண்டுமென்றால், அவர்களுக்கு சூரியனின் அருள் நிச்சயம் தேவை. அப்படி சூரிய பகவானின் அருளை பெறுவதற்காக மார்கழி முதல் நாளில் இந்த வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். மார்கழி முதல் நாளன்று சூரிய பகவானை நம்பிக்கையுடனும், பக்தியுடனும், முறையாக வழிபாடு செய்தால், பாவங்களில் இருந்து விடுபடலாம்.

எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். நோய் இல்லாத வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்த நிலை, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை உங்களை தேடி வரும். சூரிய பகவானின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையாக அமையும்.

Tags :
Advertisement