வந்தாச்சு புது ATM ரூல்ஸ்..!! இனி 30 வினாடிக்குள் பணத்தை எடுத்துவிடுங்க..!! இல்லையென்றால் மீண்டும் உள்ளே போய்விடும்..!!
ஏடிஎம் சேவை தொடர்பான மோசடி வழக்குகள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் எடுக்கும் போது, பணம் வெளியில் வராமல் பணத்தை எடுக்க சிக்கல் விளைவிக்கும் மோசடியை கையாளும் விதமாக இந்த புதிய ரூல்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதாவது, ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை ATM இயந்திரத்தில் இருந்து எடுக்கவில்லை என்றால், இனி பணம் தானாகவே ATM இயந்திரத்திற்குள் சென்றுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதியின் படி, ATM மையங்களில் இருந்து பணம் எடுக்கும் ATM கார்டு பயனர்கள், 30 வினாடிகளுக்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். பின்னர், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் மையங்களில் இருந்து சில நேரங்களில் பணம் எடுக்கப்படாமல் இருக்கும் போது, அது திருட்டு அல்லது மோசடி இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது. ரிசர்வ் வங்கியால் புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை, ஏடிஎம் மோசடி சம்பவங்களை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசடி நடப்பது எப்படி..?
ATM மோசடி என்பது மோசடிக்காரர்களால் ஏடிஎம் இயந்திரங்களில் சிறிய தகடு போன்ற தடுப்பை பணம் பெரும் வழியில் பொருத்தி, அதன் பயனர்களை எடுக்கவிடாமல் செய்வதாகும். பணத்தை எடுக்க முயன்ற பயனர்கள் பணம் வரவில்லை என்று நினைத்து, ஏடிஎம்மில் இருந்து வெளியேறியதும், சிறிது நேரத்தில் மோசடிக்காரர்கள் ATM மையத்திற்குள் சென்று, பணம் வரும் வழியில் வைக்கப்பட்டிருக்கும் தகடை எடுத்துவிட்டு, பணத்தை திருடி செல்வார்கள். இத்தகைய சிக்கலை சமாளிக்கத்தான் மத்திய அரசு அனைத்து ATM இயந்திரங்களிலும் 30 வினாடிக்குள் பணத்தை எடுக்கவில்லை என்றால், அவை தானாக மீண்டும் இயந்திரத்திற்குள் சென்றுவிடும் படியான அமைப்பை நிர்வகித்துள்ளது.
ஒரு வேலை நீங்கள் பணம் எடுக்கும்போது, பணம் வெளியில் வரவில்லை என்றால், உடனே உங்கள் வங்கிக் கணக்கை செக் செய்யுங்கள். 24 மணி நேரத்திற்குள் பணம் வரவு வைக்கப்படும். உள்ளே சென்ற பணம் அந்த நபரின் சரியான வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும்.
Read More : மாணவர்களே..!! அடுத்தாண்டு முதல் AI பாடத்திட்டம்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதை கவனிச்சீங்களா..?