தீவிரமடையும் மார்பர்க் வைரஸ்!. 10 நாட்களில் 8 பேர் பலி!. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
Marburg virus: தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் தாக்குதலால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு தான்சானியாவில் ககேரா பிராந்தியத்தில் இரண்டு மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இதுவரை பதிவான அனைத்து வழக்குகளும் இந்த பகுதியில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வைரஸ் பாதிப்பால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தினர். அதாவது, ஜனவர் 11ம் தேதி முதல், தற்போது வரை 9 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறப்படுகிறது.
WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "நோய் கண்காணிப்பு மேம்படுவதால் வரும் நாட்களில் மேலும் வழக்குகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது." உலகளாவிய ஆபத்து குறைவாக இருந்தாலும், வெடிப்பு தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் அதிக ஆபத்துக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. எபோலாவின் அதே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் மார்பர்க் வைரஸ் நோய், சிகிச்சையின்றி இறப்பு விகிதம் 88% வரை உள்ளது. அதாவது, ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, காங்கோ, கென்யா, உகாண்டாவில் மார்பர்க் வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ளது.
ருவாண்டாவில் மட்டும் 66 பேர் மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்த மார்பர்க் வைரஸ். எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். ஆகவே, மார்பர்க் பண்புகளும் எபோலாவை ஒத்துள்ளன. எபோலாவைப் போல் இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தும். 2004 - 2005 க்கு இடையில் அங்கோலாவில் 252 பேர் பாதிப்பு, 227 பேர் இறப்பு, காங்கோவில் 1998 -2000க்கு இடையில் 128 பலியாகியுள்ளனர்.
மார்பர்க் வைரஸ் (Marburg virus ) நோய் ஒரு வைரஸ் நோயாகும். இது ரத்த கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. 2023-ல் ஈக்வடோரியல் கயானாவில் இந்த மார்பர்க் வைரஸ் நோய் பரவத் தொடங்கியது. இந்நோய் முதன்முதலில் 1967-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள மார்பர்க் மற்றும் பிராங்பர்ட்டில் கண்டறியப்பட்டது. Rousettus aegyptiacus என்ற பழ வெளவால்கள் மார்பர்க் வைரஸின் இயற்கையான நோய் பரப்புனர்களாக கருதப்படுகின்றன. இவற்றில் இருந்தே வைரஸ் மக்களுக்குப் பரவுகிறது. இது பாதிக்கப்பட்ட நபர்களின் ரத்தம், எச்சில், உறுப்புகள் அல்லது பிற உடல் திரவங்கள் மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள் மற்றும் பொருட்கள் மூலம் மனிதர்களுக்கு இடையே பரவுகிறது.
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி. "அறிகுறிகள் தோன்றியதிலிருந்து ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் கடுமையான ரத்தக்கசிவு வெளிப்படும். நோய் தீவிரமானால் பல பகுதிகளிலிருந்தும் ரத்தக்கசிவி ஏற்படும். அறிகுறி தொடங்கிய எட்டு அல்லது ஒன்பது நாட்களில் இறப்பு நேரிட வாய்ப்புள்ளது" என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. தற்போது வரை எந்த சிகிச்சையும் இல்லை. அதனால்தான் மார்பர்க் போன்ற அறிகுறிகளைக் வெளிபடுத்துபவர்கள் முன்கூட்டியே கண்டறிவது முக்கியம். போதுமான நீர்ச்சத்து, வலி மேலாண்மை மற்றும் மருத்துவ கவனிப்பின் கீழ் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் பயனுள்ள வழியாகும்.
மார்பர்க் நோயைத் தடுப்பது எப்படி? மக்கள் கையுறைகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும். தொற்றுநோய்களின் போது அனைத்து விலங்கு உணவுகளும் (இரத்தம் மற்றும் இறைச்சி) நன்கு சமைக்கப்பட வேண்டும். "மார்பர்க் நோயாளிகளுடன் நெருங்கிய உடல் தொடர்பு தவிர்க்கப்பட வேண்டும். வீட்டில் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைக் கவனிக்கும்போது கையுறைகள் மற்றும் பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட உறவினர்களைப் பார்த்த பிறகும், நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்ட பிறகும் கைகளை கழுவ வேண்டும்.
மார்பர்க் வைரஸ் நோயிலிருந்து தப்பிப்பிழைத்த ஆண்கள், அறிகுறிகள் தோன்றியதிலிருந்து 12 மாதங்கள் அல்லது அவர்களின் விந்து இரண்டு முறை மார்பர்க் வைரஸுக்கு எதிர்மறையாக இருக்கும் வரை பாதுகாப்பான உடலுறவு மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
Readmore: முகத்தில் தொங்கும் சதையை இறுக்கமாக்க வேண்டுமா?. அறுவை சிகிச்சை இல்லாமல் எப்படி கரைப்பது?