குளிருக்கு தீ மூட்டிய போது நடந்த விபரீதம்.. குவைத் நாட்டில் இரண்டு தமிழர்கள் பலி..!!
குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். இந்த புகை அறை முழுவதும் பரவியதில், அறையில் இருந்த மூன்று பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் எழுந்து வெளியே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று பேரும் உயிரிழந்தனர்.
கடலூரை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் மேலும் ஒருவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து அறைக்கு வந்த நண்பர்கள் சம்பவத்தை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Read more ; துருக்கி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 66 பேர் பலி..!! 51 பேர் காயம்..