உடல் எடையை அசால்ட்டாக குறைக்கும் மாங்காய் ஜூஸ்..!! இப்படி செய்து குடிச்சிப் பாருங்க..!!
பொதுவாக தர்பூசணிப் பழம், பலாப்பழம், முந்திரிப்பழம், மாங்காய், மாம்பழம் போன்ற பருவ கால பழங்கள் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. மாம்பழங்களை வைத்து ஜூஸ், மில்க் ஷேக் என்று வித விதமாக செய்து அசத்தலாம். பழுக்காத மாங்காய்களையும் வைத்து சுவையான மேங்கோ ட்ரின்க் செய்யலாம். அதன் சுவை தனித்துவமாக இருக்கும்.
மேங்கோ டிரின்கின் நன்மைகள்:
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆதலால், இது உடல் எடையை இழப்பதற்கு உதவியாக இருக்கும். சர்க்கரை எதுவும் சேர்க்காமல் குடித்தால், இது மிகக் குறைந்த கலோரிகள் கொண்டுள்ளன. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேங்கோ ட்ரின்க் எவ்வாறு உதவுகிறது..?
ஒரு சிலர் செய்யும் சுவையான புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு பானம் தான் மேங்கோ ட்ரின்க். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆதலால், இது உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், அதிக சர்க்கரை சேர்ப்பதே இதில் உள்ள ஒரு பிரச்சனை ஆகும். மாங்காய் புளிப்பாக இருப்பதால், அதனை சற்று கட்டுப்படுத்த சர்க்கரை சேர்க்கப்படுகிறது. ஆனால், உடல் எடையைக் குறைக்க நீங்கள் இதனை நீங்கள் பருகினால், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
மேங்கோ ட்ரின்கில் கேலரிகள் :
பொதுவாக நாம் சர்க்கரை சேர்த்து இதனை தயார் செய்தால், 100 கலோரிகள் (சற்றும் அதற்கு மேல் கூட இருக்கலாம்) இருக்கும். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், அதில் வெறும் 55 கலோரிகளே உள்ளன. அதனால், எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் இந்த சுவையான பானத்தை நம் உடல் எடை இழப்பிற்கும் தாராளமாக பயன்படுத்தலாம்.
செய்முறை :
ஒரு மாங்காயை எடுத்து, குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனை 10-15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். வெந்த உடன், அதில் உள்ள தோல் மற்றும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் கூழை மிக்சியில் போடுங்கள். அதன் உடன் கொஞ்சம் புதினா இலைகளும் ஐஸ் கட்டியும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வெல்லம், ஜீரக தூள், மிளகுப் பொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான், இதனை பருகி தாகத்தையும் தணித்து கொள்ளலாம், உங்கள் உடல் எடையையும் குறைத்துக் கொள்ளலாம்.
Read More : ஓய்வு பெறும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு..!!