முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடு முழுவதும் பாலிதீன் பைகளுக்கு கட்டாய தடை...! மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு...!

Mandatory ban on polythene bags across the country
07:00 PM Jul 25, 2024 IST | Vignesh
Advertisement

நாடு முழுவதும் பாலிதீன் பைகளுக்கு கட்டாய தடையை மத்திய அரசு விதித்துள்ளது.

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021-ஐ 12 ஆகஸ்ட் 2021 அன்று அறிவித்தது, இது 2022 ஜூலை 1 முதல், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்கிறது. 2022 டிசம்பர் 31 முதல் 12 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஒரு சதுர மீட்டருக்கு 60 கிராமுக்கும் குறைவாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் கேரி பைகளும் 2021 செப்டம்பர் 30 முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், திருத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-க்கு மேலாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் கேரி பைகள், அல்லது அடையாளம் காணப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்வது தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்த அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ வலுப்படுத்தவும், கண்டறியப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அதன்படி, அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், திறமையான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்காகவும் தலைமைச் செயலாளர், நிர்வாகி தலைமையில் சிறப்பு பணிக்குழுவை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் அமைத்துள்ளன. அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ திறம்பட செயல்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக அமைச்சகத்தால் தேசிய அளவிலான பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 120 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான தடிமன் கொண்டபிளாஸ்டிக் கைப்பைகள்தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வழங்காமல் இருப்பதற்காக சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 பிரிவு 5-ன் கீழ் பிளாஸ்டிக் மூலப்பொருள் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பழங்கள் மற்றும் காய்கறி சந்தைகள், மொத்த சந்தைகள், உள்ளூர் சந்தைகள், மலர் விற்பனையாளர்கள், பிளாஸ்டிக் கைப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் 12 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள் அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 12 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு தடை விதிக்க வழக்கமான அமலாக்க இயக்கங்களை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Next Article