முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவனம்!!! முட்டையால் பறிபோன உயிர்...

ATTENTION!!! The life lost by the egg...
07:11 PM Nov 05, 2024 IST | Saranya
Advertisement

நாளுக்கு நாள் பசியின் கொடுமை அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஒரு பக்கம் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமல் தவிக்கும் மக்கள், மற்றொரு பக்கம் உணவு இருந்தும் வேலையின் காரணமாக சாப்பிட நேரம் இல்லாமல் தவிக்கும் மக்கள். அந்த வகையில், தற்போது பசியால் நபர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஆம், தெலுங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், லிங்காலா, பிஜினப்பள்ளி, வட்டமோன் கிராமத்தில் வசித்து வருபவர் 48 வயதான திருப்பத்தையா. இவர் லிங்காளா கிராமத்திற்கு தனது சொந்த வேலையாக வந்துள்ளார். காலையில் உணவு சாப்பிடாமல் வந்த அவருக்கு, வேலையை முடித்துவிட்டு வரும்போது அதிகம் பசி எடுத்துள்ளது. இதனால், அவர் சென்னாம்பள்ளி சதுக்கம் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அதிக பசியின் காரணமாக, அவர் தான் வாங்கிய முட்டையை முழுவதுமாக வாயில் திணித்து சாப்பிட முற்பட்டுள்ளார். இதனால் முட்டை அவரது தொண்டையில் சிக்கி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அவரை காப்பாற்ற முற்படுவதற்குள் அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லிங்காளா காவல்துறையினர், விரைந்து வந்து திருபத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read More : ”எல்லா தேர்தல்களிலும் அடி வாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு”.? மன்னிப்பு கேள்..!! சீமானுக்கு எதிராக தவெக போஸ்டர்..!!

Tags :
தெலுங்கானாமரணம்முட்டைமூச்சுத்திணறல்
Advertisement
Next Article