முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொதுவெளியில், பெண்களின் அந்தரங்க பகுதியில் கை வைத்த வாலிபர்; போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..

man-touched-private-parts-of-women-in-public
07:37 PM Nov 05, 2024 IST | Saranya
Advertisement

கருவறையை தவிர வேறு எங்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆண்கள் சிலர் பாதுகாப்பு இலையென்றால் பெண்கள் ஏன் வெளியே செல்ல வேண்டும்? பெண்கள் ஏன் இந்த ஆடைகளை போடுகிறீர்கள் என்று கேள்விகளை கேட்பது உண்டு. 6 மாத குழந்தைகளை கூட வீட்டில் உள்ள மிருகங்களே பலாத்காரம் செய்யும் அவல நிலையில் பெண்கள் இருப்பதை அந்த ஆண்கள் மறந்து விடுகிறார்கள். அந்த வகையில் பொதுமக்கள் கூடும் இடம் என்றால் சற்று பாதுகாப்பாக இருக்கும் என பல பெண்கள் உணருவது உண்டு. ஆனால் இனி அங்கும் பாதுகாப்பு இல்லை என்று நிருபித்துள்ளது கோவையில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம்.

Advertisement

ஆம், கோவை ஆவாரம்பாளையம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான கவின். எம்பிஏ பட்டதாரியான இவர், விளாங்குறிச்சியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கௌலி பிரெளன் சாலையில் இருந்து அவிநாசி சாலை மேம்பாலத்தில், 43 மற்றும் 53 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், நேற்று காலை சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த கவின், அவர்கள் அருகே சென்று அவர்களின் அந்தரங்க பகுதியை தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அப்போது, கவின் அங்கிருந்து தப்பித்து விட்டார்.

ஆனால், சிறிது நேரத்தில் பிஆர்எஸ் மைதானம் அருகே கவின் மீண்டும் அந்தப் பெண்களை பின்தொடர்ந்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கவின் வந்த வாகன எண்ணை எடுத்து, அதன் மூலம் அவரின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்து கவினின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.

இரண்டாவது முறை அந்தப் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது, அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதற்றமடைந்த கவின் அவசர அவசரமாக தப்பிக்க முயன்ற போது, பைக்கிலிருந்து கீழே விழுந்து, அவரின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற கவின், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் கவினை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கவினின் செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் இருந்தாகவும், இதேபோல பெண்களை பின்தொடர்ந்து போட்டோ எடுப்பது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை கவின் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More: எச்சரிக்கை!!! பெற்றோரின் கவனக்குறைவால் துடிதுடித்து உயிரிழந்த குழந்தைகள்..

Tags :
coimbatorecyclingITemployeesexual harassment
Advertisement
Next Article