For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நீ எல்லாம் என்னோட தங்கச்சிய லவ் பண்ண கூடாது" நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல்; இறுதியில் நடந்த சோகம்..

young man was killed who opposed marriage
06:08 PM Jan 13, 2025 IST | Saranya
 நீ எல்லாம் என்னோட தங்கச்சிய லவ் பண்ண கூடாது  நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல்  இறுதியில் நடந்த சோகம்
Advertisement

திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வீரமாணிக்கம். சிவகாசி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் துப்புரவு தொழில் செய்து தங்களின் மகனை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, இவரது 17 வயது நண்பன், இவரின் சித்தி மகளான 14 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இதனால், வீரமாணிக்கம் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

ஒரு கட்டத்தில், நாம் பேசி சமரசம் செய்து கொள்ளலாம் என்று கூறி, 17 வயது சிறுவன், வீரமாணிக்கத்தை அழைத்துள்ளார். அதன் படி, இருவரும் கண்ணகி காலனி கால்நடை மருத்துவமனை அருகே சந்தித்துள்ளனர். அப்போது சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வீரமாணிக்கத்தை சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த வீரமாணிக்கத்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வீரமாணிக்கம் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! நாளை இந்த 3 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement