இணையத்தில் வைரலான உல்லாச வீடியோ; கணவனை ஏமாற்றிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..
பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. எந்த தவறும் செய்யாமல் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டாலும், தப்பு என்று தெரிந்தும் ஒரு சில பெண்கள் பிரச்சனையில் சிக்கி கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது தென்காசியில் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முசாபுதீன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே திருமணமான 30 வயது பெண் ஒருவருடன் வேலை பார்க்கும் இடத்தில் வைத்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சில நாட்கள் நட்பாக பழகி வந்த நிலையில், இவர்களின் நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இப்படி இருவரும் உல்லாசமாக இருப்பதை, முசாபுதீன் அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார்.
பின்னர், முசாபுதீன் தான் எடுத்து வைத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதன் மூலம், அந்த பெண்ணின் நடத்தைகள் குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் பயந்து போன அந்த பெண், முசாபுதீனுடன் உள்ள தொடர்பை துண்டித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடவடிக்கை மேற்கொண்டு முசாபுதீனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.