"என்ன கல்யாணம் பண்ணிக்கோ" ஆசையை கேட்ட காதலி; பிரிட்ஜில் இருந்து விழுந்த உருவம்.. போலீசாரை அதிர வைத்த சம்பவம்..
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் திரேந்திரா. இவர் கடந்த 6 மாதங்களாக துபாயில் உள்ள நிலையில், தனத் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், பல்வீர் ராஜ்புத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டின் கீழ் தளத்திற்கு குடி வந்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் உள்ள இரண்டு அறைகளை, அவருக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த படிடார் என்ற நபர் பூட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து, பல்வீர் பூட்டி இருக்கும் இரண்டு அறைகளையும் பயன்படுத்துவதற்காக துபாயில் உள்ள வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்றுள்ளார். அதற்க்கு அவர் அனுமதித்த நிலையில், பல்வீர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது அந்த அறையில் இருந்த ஃப்ரிட்ஜ் ஓடிக்கொண்டு இருந்துள்ளது. இதனால் தான் தனக்கு அதிக மின்சார கட்டணம் வந்ததாக நினைத்து ஆத்திரம் அடைந்த பல்வீர், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு காலையில் அறையை சுத்தம் செய்து கொள்ளலாம் என்று சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலையில், வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை சோதனை செய்துள்ளனர். ஃப்ரிட்ஜை திறந்த போது, பெட் ஷீட்டால் சுற்றப்பட்ட இளம் பெண்ணின் சடலம், அழுகிய நிலையில் கீழே விழுந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் அந்த பெண் யார் என்பதை குறித்து அந்த பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், இதற்கு முன்பு அந்த வீட்டில் வாசித்த படிடார் என்பருடன் அந்த பெண் ஒன்றாக வசித்ததாகவும் கடந்த மார்ச் மாதம் முதல் அவரை காணவில்லை என்றும் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் படிடாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்து நண்பரின் உதவியுடன் ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.