துடிக்க துடிக்க மகளை கொலை செய்துவிட்டு கோவாவில் சூதாட்டம்.! கொடூரத் தந்தையின் வெறி செயல்.!
கேரள மாநிலம் கொச்சியில் தனது மகளை கொலை செய்துவிட்டு சுற்றுலா சென்ற தந்தைக்கு தண்டனை அறிவிக்கப்பட இருக்கும் நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொலை நடந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்க உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சானு மோகன். மகாராஷ்டிரம் மாநிலத்தில் நிதி மோசடி வழக்கில் குற்றவாளியான இவர் தனது மகள் இருந்தால் தனக்கு பாரமாகி விடுவாள் என்று கருதி கடந்த 2021 ஆம் ஆண்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மகளை கொலை செய்தார். இதன் பின்பு தலைமறைவான அவர் பெங்களூர் கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பதுங்கி இருந்தார்.
மேலும் கோவாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் 45 ஆயிரம் ரூபாய் ஒரே இரவில் செலவு செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் அவர் தலைமறைவாக இருந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சானு மோகன்.
இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தண்டனை குறித்த விவரங்கள் இன்று வெளியிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது . மகளை கொலை செய்து விட்டு சுற்றுலா சென்ற தந்தைக்கு தண்டனை அறிவிக்கப்பட இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது